Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Ilango Bharathy / 2022 நவம்பர் 15 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை கைப்பற்றியுள்ள டெஸ்லா ,ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகர் எலோன் மஸ்க் (Elon musk) அண்மைக்காலமாக டுவிட்டரில் பல மாற்றங்களை செய்து வருகின்றார்.
குறிப்பாக டுவிட்டரில் அதிகாரபூர்வக் கணக்குகளுக்கு வழங்கப்படும் ‘நீல வண்ண டிக் குறியீட்டினை‘ (ப்ளூ டிக் ) ஏனையவர்களும் பயன்படுத்த மாதம் 8 டொலர்கள் வசூலிக்கும் திட்டத்தினையும் அமுல்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து ஏராளமான கணக்குகள் கட்டணம் செலுத்தி நீல வண்ணக் குறியீடுகளைப் பெற்றன. அதே சமயத்தில் ஏராளமான போலிக் கணக்குகளும் டிக் குறியீட்டினைப் பெற்றுள்ளன.
இது இவ்வாறு இருக்க இயேசு கிறிஸ்துவின் பெயரில் தொடங்கப்பட்ட டுவிட்டர் கணக்கொன்றுக்கு ப்ளூ டிக் வழங்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த டுவிட்டரில் கணக்கின் பயோவில்(Bio), தான் ஒரு 'தச்சர், ஹீலர் மற்றும் கடவுள்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கணக்கினைப் 783.2k பின்தொடர்கின்றனர்.
இக்கணக்கில் வேடிக்கையான டுவிட்கள், பகிரப்பட்டு வருகின்றது. மேலும் கடந்த 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கணக்கிற்கு டுவிட்டர் நிறுவனம் தற்போது ப்ளூ டிக்கை கொடுத்துள்ளமை மக்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் போலிக் கணக்குகள் அதிகரித்துள்ளதால் குறித்த ப்ளூ டிக் அம்சத்தினை தற்காலிகமாக டுவிட்டர் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
18 minute ago
26 minute ago
35 minute ago