Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Ilango Bharathy / 2023 பெப்ரவரி 23 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில், கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று, ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றார்.
இந்நிலையில் அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடையவுள்ளதால் அமெரிக்காவில் தற்போது அடுத்த ஜனாதிபதி யார்? என்ற ஐயம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் மீண்டும் ஜோ பைடனே போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே போல, குடியரசு கட்சி சார்பில் போட்டியிடபோவதாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்த நிலையில் தற்போது அதே கட்சியின் சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ‘விவேக் ராமசாமி ‘ என்பவரும் போட்டியிடவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இது அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago