Freelancer / 2025 மே 15 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரியாத் நகரில், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் கூட்டத்துக்கு முன்பு, அகமது அல்-ஷாராவை அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் சந்தித்தார்.
மூடப்பட்ட அறைக்குள் நடந்த சந்திப்பில், பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. கடந்த 2000ஆம் ஆண்டுக்கு பிறகு, இரு நாடுகளின் தலைவர்களும் சந்திப்பது இதுவே முதல்முறை ஆகும்.
ட்ரம்ப்-இளவரசர் சல்மான்-அகமது அல்-ஷாரா ஆகியோர் இடையிலான சந்திப்பில், துருக்கி ஜனாதிபதி எர்டோகன், தொலைபேசி அழைப்பு மூலம் கலந்துகொண்டார்.
பின்னர், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், ''சிரியா மீதான பொருளாதார தடைகளை நீக்க உத்தரவிட்டுள்ளேன். அந்த தடை, சிரியாவை முடக்குவதாக இருந்தது. தடையை நீக்குவது சிரியாவுக்கு புதிய தொடக்கமாக அமையும். சவுதி அரேபிய பட்டத்து இளவரசர்தான் இந்த முடிவு எடுக்க காரணம்'' என்று கூறினார்.
பொருளாதார தடை நீக்கம் குறித்த ட்ரம்ப் அறிவிப்பை சிரியாவில் அனைத்து தரப்பினரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
10 minute ago
15 minute ago
22 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
15 minute ago
22 minute ago
37 minute ago