Freelancer / 2025 மே 29 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் இருந்து, வியாழக்கிழமை (29) வெளியேறுவதாக, எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,
“சிறப்பு அரசு ஊழியராக எனது திட்டமிடப்பட்ட காலம் முடிவடையும் நிலையில், வீண் செலவுகளைக் குறைப்பதற்கான வாய்ப்பை வழங்கியதற்காக அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு பின் எலான் மஸ்க்கை சிறந்த நிர்வாகத்துக்கான துறை தலைவர் என்ற சிறப்பு பதவியில் அமர்த்தினார். அமெரிக்க அரசின் செலவுகளை குறைப்பது, நிறுவனங்களை சீரமைப்பது போன்ற பணிகள் ஒப்படைக்கப்பட்டன.
மஸ்க் பொறுப்பேற்ற பின் இதுவரை அரசின் செலவுகளில் 10 இலட்சம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தி இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. மஸ்க் இந்த பதவியில் 130 நாள் பணியாற்றுவதற்கு ஒப்புக் கொண்டிருந்தார். அவரின் பதவிக்காலம் இந்த மாத இறுதியில் முடிவடைகிறது.
14 minute ago
19 minute ago
27 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
19 minute ago
27 minute ago
33 minute ago