Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூன் 01 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில், மாறி கொள்கலனுக்குள் இருந்த 25 கோடிக்கும் அதிகமான வளர்ப்பு தேனீக்கள் பறந்து சென்ற சம்பவம், அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாண நெடுஞ்சாலை ஊடாக,தேனீ பண்ணைக்குச் சொந்தமான மாறி ஒன்றில் 25 கோடிக்கும் அதிகமான வளர்ப்பு தேனீக்கள் கொண்டு செல்லப்பட்டன.
கனடா எல்லையில் உள்ள வாங்டாம் அருகே சென்றுகொண்டிருந்த போது, குறித்த லொறி வேக கட்டுப்பாட்டை இழந்து, நிலைதடுமாறி வீதியோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் லொறியின் கொள்கலனுக்குள் அடைத்து வைக்கப்பட்டு இருந்த தேனீக்கள் தப்பி பறந்து சென்றுள்ளன. இதனையடுத்து அந்த வீதி மூடப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
தகவலின்பேரில் அங்கு விரைந்த மீட்பு படையினர் தப்பியோடிய தேனீக்களை மீட்க முயன்று வருகின்றனர். இதன்காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் கவனமாக இருக்குமாறு உள்ளூர் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago