2025 ஜூலை 28, திங்கட்கிழமை

தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளான பஸ்: 10 பேர் துடிதுடித்து பலி

Editorial   / 2025 ஜூலை 28 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாதிலிருந்து பஞ்சாப் மாநிலத்தின் லாகூர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்து, பாலகசார் என்ற பகுதியில் சென்றுக் கொண்டிருந்தபோது, அதன் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், விபத்தில் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 30 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொலிஸார் மற்றும் மீட்பு பணியாளர்கள் இணைந்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .