Editorial / 2019 மார்ச் 06 , பி.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடகிழக்கு பாகிஸ்தானில், ஜைஷ்-ஈ மொஹமட்டால் நடாத்தப்படும் சமயப் பாடசாலையொன்றானது, குறித்த குழுவின் பயிற்சி முகாமை தமது போர் விமானங்கள் தாக்கியதாகவும் பெரும் எண்ணிக்கையான ஆயுததாரிகளைக் கொண்டதாகவும் இந்தியா தெரிவித்த சில நாட்களில், அப்பிடியே இருப்பதை உயர் தெளிவான செய்மதிப் புகைப்படங்கள் வெளிக்காட்டியுள்ளன.
ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவைத் தளமாகக் கொண்ட தனியார் செய்மதி இயக்குநரொன்றான பிளனட் லாப்ஸ் நிறுவனத்தின் செய்மதிப்படங்களில், விமானத் தாக்குதல் இடம்பெற்று ஆறு நாட்களின் பின்னர், கடந்த திங்கட்கிழமை, மதராஸாவில் ஆகக்குறைந்தது ஆறு கட்டடங்கள் இருப்பது காண்பிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், 2018ஆம் ஆண்டு ஏப்ரலிலிருந்து குறித்த இடத்தில் மாற்றமெதுவும் ஏற்படவில்லை. கட்டடங்களின் மேற்தளங்களில் ஓட்டைகளெதுவோ அல்லது சுவர்கள் வெடித்த அடையாளங்களோ, மதராஸாவைச் சூழவுள்ள மரங்கள் அழிந்த்ததோ அல்லது தாக்குதல் இடம்பெற்றதற்கான எந்தவொரு தடயங்களோ காணப்பட்டிருக்கவில்லை.
இதேவேளை, குறித்த செய்மதிப் புகைப்படங்கள் தொடர்பாக, இந்திய வெளிநாட்டு, பாதுகாப்பு அமைச்சுகளுக்கு மின்னஞல்கள் மூலம் அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு அந்த அமைச்சுகள் பதிலளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025