2025 மே 17, சனிக்கிழமை

தாய்லாந்து குகை சம்பவம்; 4 வருடங்களுக்குப் பின்னர் உயிரிழந்த இளைஞன்

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 16 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தாய்லாந்தில்கடந்த 2018 ஆம் குகையொன்றுக்குள் சிக்கி உலகளவில் கவனத்தை ஈர்த்த 12 சிறுவர்களில்  ஒருவனான ‘டுவாங்பெட்‘ அண்மையில் உடல் நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். 

சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகைக்குள், நண்பனின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக தமது காற்பந்து பயிற்சியாளருடன் சென்ற குறித்த சிறுவர்கள் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால்  குகையை விட்டு வெளியே வரமுடியால்  சிக்கித் தவித்தனர்.

இச்சம்பவமானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், சுமார் 18 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர்  அவர்கள் மீட்புப் படையினால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

  இந்நிலையில் குறித்த காற்பந்து அணியின் தலைவராக இருந்த டுவாங்பெட் என்ற இளைஞன்,  பிரித்தானியாவில் உள்ள, புரூக் ஹவுஸ் கல்லூரியில்  கல்வி கற்று வந்த நிலையில், தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்றுவந்த நிலையில் கடந்த 12 ஆம் திகதி  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .