2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்

Freelancer   / 2024 ஓகஸ்ட் 15 , மு.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் அரசியலமைப்பை மீறியதாக நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஒருவரை அமைச்சரவை உறுப்பினராக நியமித்ததன் மூலம் நெறிமுறைகளை மீறியதன் அடிப்படையில் இப்பதவி நீக்க உத்தரவு வழங்கப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு தேர்தலில் அதிக இடங்களைப் பெற்ற நாட்டின் பிரபலமான முற்போக்கு மூவ் ஃபார்வர்ட்  கட்சியை நீதிமன்றம் கலைத்து, அதன் தலைவர்களை 10 ஆண்டுகளுக்கு அரசியலில் இருந்து தடை செய்து ஒரு வாரத்திற்குப் பிறகு இத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X