Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Ilango Bharathy / 2023 பெப்ரவரி 27 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானில் 26 வயதான மரவியா மாலிக் என்ற திருநங்கை வசித்து வருகிறார்.
இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகின்றார்.
இவர் அந்நாட்டில் உள்ள திருநங்கைகளின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மர்வியா மாலிக்கை லாகூர் நகரில் வைத்து மர்ம நபர்கள் இருவர் துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர்.
இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
குறித்த புகாரில் “எனக்கு ஏற்கனவே பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. இதற்கு பயந்து நான் சில காலம் லாகூரை விட்டு தள்ளி இருந்தேன். ஆனால் ஒரு அறுவை சிகிச்சைக்காக தற்போது லாகூர் வந்தேன். அப்போதுதான் தன்னை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
16 May 2025