2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

துருக்கி நிலநடுக்கம்: 11 ஆயிரத்தை கடந்த உயிரிழப்புகள்

Freelancer   / 2023 பெப்ரவரி 09 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 11,000 ஐ கடந்துள்ளது.

கடந்த பல தசாப்தங்களின் பின்னர் ஏற்பட்ட மிகக் கொடூரமான இயற்கை சீற்றம் இதுவென புவியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த திங்கள் கிழமை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் துருக்கியில் 8,574 பேரும், சிரியாவில் 2,662 பேரும் உயிரிழந்ததாக துருக்கிய அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,236 ஆக அதிகரித்துள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X