Freelancer / 2025 மார்ச் 02 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
துருக்கியில், 40 ஆண்டுகாலமாக நடந்து வந்த உள்நாட்டு போரை நிறுத்துவதாக, குர்திஸ் தொழிலாளர் கட்சி அறிவித்துள்ளது.
துருக்கியில், கடந்த 1978ஆம் ஆண்டு, அப்துல்லா ஓசலான் உருவாக்கிய குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி, 1984ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சியை ஏற்படுத்தி, உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வந்தது.
இதனால், குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி தடை செய்யப்பட்டதோடு, துரோக குற்றச்சாட்டில் 1999ஆம் ஆண்டு ஓசலான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, 40 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போரில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்த போரால் தென்கிழக்கு துருக்கி, சிரியா, வடக்கு ஈராக் மற்றும் ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்த சூழலில், குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் ஆயுதப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக, அந்த அமைப்பின் தலைவர் ஓசலான் கருத்து தெரிவித்தார்.
இதனையடுத்து, துருக்கியில் 40 ஆண்டுகாலமாக நடந்து வந்த உள்நாட்டு போரை நிறுத்துவதாக, குர்திஸ் தொழிலாளர் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
“தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டாத வரை, இனி ஆயுதம் ஏந்தி போராட மாட்டோம்” என்று, குர்திஸ் தொழிலாளர் கட்சி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
14 minute ago
26 minute ago
31 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
26 minute ago
31 minute ago
39 minute ago