Ilango Bharathy / 2022 பெப்ரவரி 07 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாய்லாந்தில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகத்தில் பெண்களின் குளியலறையில் ரகசியமாக கெமராக்கள் பொருத்தப்பட்டிருந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் அத் தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரை தாய்லாந்துப் பொலிஸார் கைது செய்துள்ளனர் எனவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து தாய்லாந்தின் வெளிவிவகாரப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் கருத்துத் தெரிவிக்ககையில் ” தூதரகத்தில் உள்ள அனைத்து ஊழியர்களின் நலன் மற்றும் தனியுரிமைக்கு எப்போதும் முன்னுரிமை கொடுப்போம். நாங்கள் அவர்களுக்கு தொடர்ந்து தகுந்த ஆதரவை வழங்குகிறோம்'' என்றார்.
12 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
28 minute ago