Editorial / 2026 மார்ச் 11 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், மெக்சிகோவின் காபோ சான் லூகாஸ் கடற்கரையில் 'உலக அழிவின் அறிகுறி' எனக் கருதப்படும் இரண்டு 'ஓர்பிஷ்' (Oarfish) மீன்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தையும் அச்சத்தையும் கிளப்பியுள்ளது.
மத்திய கிழக்கில் தற்போது ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது. ஏனைய மத்திய கிழக்கு நாடுகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த மோதல் ஒரு 'மூன்றாம் உலகப் போராக' உருவெடுக்குமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.
இவ்வாறான பதற்றமான சூழலில், மெக்சிகோ கடற்கரையில் 'டூம்ஸ்டே' எனப்படும் இரண்டு ஓர்பிஷ் மீன்கள் கரை ஒதுங்கியுள்ளன. சுமார் 30 அடி நீளம் வரை வளரக்கூடிய இந்த மீன்கள், பொதுவாகக் கடலுக்கு அடியில் 3,000 அடி ஆழத்திலேயே வாழக்கூடியவை. இவை மிகவும் அரிதாகவே நீரின் மேற்பரப்பிற்கு வரும்.
புராதன நம்பிக்கைகளின்படி, ஆழ்கடலில் வாழும் இந்த மீன்கள் நீரின் மேற்பரப்பிற்கு வருவது என்பது ஒரு பெரும் இயற்கைப்பேரழிவு அல்லது உலகளாவிய மாற்றங்கள் நிகழப்போவதற்கான சமிக்ஞையாகக் கருதப்படுகிறது. இதனாலேயே இவை 'உலக அழிவு மீன்கள்' என்று அழைக்கப்படுகின்றன.
மெக்சிகோ கடற்கரையில் நடந்து சென்ற சகோதரிகளான மோனிகா பிட்டிங்கர் மற்றும் அவரது சகோதரி, ஆழமற்ற நீரில் ரிப்பன் போல மின்னிய இந்த மீன்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து மோனிகா தெரிவிக்கையில், "அவை மிக அழகாக மின்னின. முதலில் எங்களால் எங்களது கண்களையே நம்ப முடியவில்லை" எனக் கூறி, அது தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிலவும் போர்ச் சூழலையும், இந்த மீன்களின் வருகையையும் ஒப்பிட்டுப் பலரும் விவாதித்து வருகின்றனர். இது ஒரு தற்செயலான நிகழ்வா அல்லது உலகிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா என்ற கேள்வி தற்போது பலமாக எழுந்துள்ளது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago