2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

தெற்கைக் குற்றஞ்சாட்டுகிறது வடக்கு

Editorial   / 2018 நவம்பர் 13 , மு.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கொரியாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில், கடந்த வாரம் ஆரம்பித்த சிறியரக இராணுவப் பயிற்சிகள், கொரியத் தீபகற்பத்தில் பதற்றத்தைக் குறைப்பது தொடர்பில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை மீறுவதாக அமைந்துள்ளது என, வடகொரிய அரச ஊடகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஐ.அமெரிக்காவையும் தென்கொரியாவையும் சேர்ந்த சுமார் 500 வீரர்கள், இப்பயிற்சிகளில் ஈடுபட்டனர். ஏற்கெனவே, இரு நாடுகளுக்குமிடையில் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயிற்சிகளும், இதன்போது இடம்பெற்றிருந்தன.

இந்நிலையிலேயே, இதைக் கண்டித்துள்ள வடகொரியா, “ஆத்திரமூட்டும் அனைத்து நடவடிக்கைகளையும்” நிறுத்த வேண்டுமெனக் கோரியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X