2025 மே 14, புதன்கிழமை

நவாஸ் ஷெரீப்க்கு பிணை

Freelancer   / 2023 ஒக்டோபர் 25 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்(73) மீது அல் அஜிசியா மில் ஊழல், அவென்பீல்டு ஊழல், தோஷகானா ஊழல் உள்ளிட்ட வழக்குகள் போடப்பட்டது. சொத்து மதிப்பை மறைத்ததற்காக கடந்த 2016ல் பிரதமர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டு, ஊழல் வழக்கில் சிறையில் 7 ஆண்டு தண்டனை அனுபவித்து வந்த அவர், மருத்துவ சிகிச்சைக்காக 2019 ம் ஆண்டு லண்டனுக்கு சென்றார். பின்னர் லண்டனில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார்.

 இந்நிலையில்,நவாசுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், இரண்டு ஊழல் வழக்குகளில் வரும் 24ம் திகதி வரை பிணை வழங்க இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தோஷகானா வாகனங்கள் வழக்கில் அவருக்கு எதிரான கைது பிடியாணை ரத்து செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X