Editorial / 2019 மே 10 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாய்லாந்தில் 2014ஆம் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் இடம்பெற்ற முதலாவது நாடாளுமன்றத் தேர்தலில், எதிர்கட்சியான பூவா தாய் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்றுள்ளதாக, அந்நாட்டின் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷின்வத்தரவால் ஆதரவளிக்கப்படுகின்ற பூவா தாய் கட்சி 136 ஆசனங்களைப் பெற்றுள்ள நிலையில், ஆளும் இராணுவத்துக்குச் சார்பான பலாங் பிராச்சா ராத் கட்சி 115 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், 250 ஆசனங்களைக் கொண்ட செனட்டானது பலாங் பிராச்சா ராத் கட்சிக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், இக்கட்சி ஆட்சியில் தொடர்வதற்கான வாய்ப்புகளே அதிகம் காணப்படுகின்றன.
வாக்கு எண்ணிக்கையானது தாமதங்களாலும், முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகளால் பாதிக்கப்பட்ட நிலையில், வாக்களிப்பு இடம்பெற்று ஆறு வாரங்களுக்குப் பின்னரும், தொடர்ச்சியான உத்தியோகபூர்வ நிகழ்வுகளின் பின்னர் மூன்று நாள்களில் தாய்லாந்தின் மன்னர் மகா வஜிரலொங்கன் முடிசூடிய சில நாள்களிலேயே தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், அடுத்த பிரதமருக்கான வாக்களிப்பான சில வாரங்களுக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தவகையில், 1930களில் மன்னராட்சி பகுதியளவில் நீக்கப்பட்ட பின்னர் 2014ஆம் ஆண்டு 12ஆவது தடவையாக இராணுவப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த இராணுவ அரசாங்கமானது தொடர்ந்தும் பதவியில் இருக்கப் போவதுடன், பலாங் பிராச்சா ராத் கட்சியின் தற்போதைய இராணுவத் தலைவர் பிரதமர் பிரயுத் சா ஒச்சா பதவியில் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் விதிகளின்படி, அடுத்த பிரதமரைத் தெரிவு செய்வதற்கு நாடாளுமன்றத்துடன் இணைந்து செனட் வாக்களிக்கையில், செனட்டின் 250 ஆசனங்களையும் இராணுவமே வைத்திருக்கிறது. அந்தவகையில், பலாங் பிராச்சா ராத் கட்சிக்கு, செனட்டும், நாடாளுமன்றமும் இணைந்து அடுத்த தலைவரைத் தெரிவுசெய்யும்போது போதுமான வாக்குகளைப் பெறுவதற்கு சிறிய கட்சிகளின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago