2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நிதி திரட்டிய ஸ்பைடர் மேன் கைது

Ilango Bharathy   / 2022 மே 06 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில், கருக்கலைப்பை குற்றமாக்கும் சட்டவரைவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக 61 மாடி கட்டிடத்தில் ஏறிய இளைஞரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அமெரிக்க உச்ச நீதிமன்றம், கருக்கலைப்பை குற்றமாக்கும் சட்டவரைவை இயற்றி வருவதாக வெளியான தகவலைக் கண்டித்து அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கடந்த 3 ஆம் திகதி மேய்சன் டெஸ்சாம்ப்ஸ் (Maison DesChamps) என்ற 22 வயது கல்லூரி மாணவர், கருக்கலைப்புக்கு எதிரான தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவதற்காக, சான் பிரான்சிஸ்கோ நகரின் உயரமான கட்டிடமாக கருதப்படும் சேல்ஸ் பேர்ஸ் டவர் (Salesforce tower )மீது ஸ்பைடர் மேனைப் போல் ஏறினார்.

இதனையடுத்து  பொலிஸாரின்  தொடர் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் 1,070 அடி உயர கட்டிடத்தில் ஏறிய டெஸ்சாம்ப்ஸை மாடியில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.

இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X