Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2023 நவம்பர் 17 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு சீனாவின் ஷாங்சி மாகாணம் லுலியாங் நகரில் யோங்ஜு நிலக்கரி நிறுவனத்தின் அலுவலகம், 5 மாடி கட்டிடம் ஒன்றில் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்தக் கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் நேற்று காலையில் தீப்பற்றியது.
இத்தீ மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியி்ல் ஈடுபட்டனர். எனினும் தீ விபத்தில்26 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர்காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சீனாவில் நிலக்கரி உற்பத்தியில் ஷாங்கி மாகாணம்முதலிடத்தில் உள்ளது. பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக இங்குள்ள நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் விபத்து ஏற்படுவது வழக்கமாக உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
8 hours ago