R.Tharaniya / 2025 டிசெம்பர் 11 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தோனேசியா அதிபர் பிரபாவோ சுபியாண்டோ அரசுமுறை பயணமாக பாகிஸ்தான் சென்றார். 2019ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தோனேசியா ஜனாதிபதி ஒருவர் பாகிஸ்தான் செல்வது இதுவே முதல்முறையாகும். இஸ்லாமாபாத் சென்ற அவருக்கு இராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இருநாடுகளுக்கு இடையே இராணுவம், பொருளாதாரம் மற்றும் கல்வி தொடர்பாக 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
பாகிஸ்தான் நாட்டின் மாணவர்கள் கல்வி உதவித்தொகையில் இந்தோனேசியா சென்று பட்டப்படிப்பு படிப்பது போன்றவை இதில் அடங்கும். மேலும் இந்தோனேசியாவை மருத்துவ அரங்கில் உயர்த்துவதற்காக பாகிஸ்தானை சேர்ந்த டாக்டர்கள் குழுவினர் அங்கு சென்று அவர்களுக்கு தொழில்முறை பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025