Freelancer / 2023 நவம்பர் 15 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வரும்நிலையில் இந்த போரில் இரு தரப்பிலும் பல ஆயிரம் உயிரிழந்து உள்ளனர். மேலும் இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டு உள்ளனர்.

அவர்களை மீட்கும் தீவிர பணியில் இஸ்ரேல் பாதுகாப்பு படை ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் நாட்டில் இருந்து காசாவுக்கு பிடித்து செல்லப்பட்ட பணய கைதிகளை விடுவிக்க கோரி, அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் 2.9 லட்சம் பேர் பேரணியாக சென்றுள்ளனர்.
இந்த பேரணியில், பங்கேற்றவர்கள் பணய கைதிகளுக்கு ஆதரவாக வாசகங்கள் அடங்கிய ஆடைகளை அணிந்தபடி காணப்பட்டனர். ஒக்டோபர் 7-ந் திதிக்கு பின்னர் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவில் அதிக அளவில் மக்கள் கூடிய நிகழ்வாக இது உள்ளது குறிப்பிடத்தக்கது.
5 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago