2025 மே 16, வெள்ளிக்கிழமை

பந்தாடியது பயங்கர புயல்

Freelancer   / 2023 ஏப்ரல் 02 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வொஷிங்டன்

அமெரிக்காவின் பல மாகாணங்களில் கடந்த சில மாதங்களாக பனிப்புயல், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் ஏற்படும் பாதிப்புகளின் தீவிர தன்மையை குறைக்க அரசாங்கம் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வருகிற 10-ந் திகதி வரை வானிலை ஆய்வு மையம் சார்பில் அங்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் சனிக்கிழமை பலத்த புயல் காற்று வீசியது. இதனால் பல மாகாணங்கள் பலத்த பாதிப்புக்கு உள்ளாகின.

ஏராளமான வீடுகள் மற்றும் அலுவலகங்கள் சேதம் அடைந்தன. பல நகரங்கள் இருளில் மூழ்கின. 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி தவிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்த புயல் காற்றுக்கு நாடு முழுவதும் இதுவரை 21 பேர் பலியாகி உள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .