2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

’பறக்கும் ஹோட்டல்’

Mithuna   / 2023 டிசெம்பர் 11 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகில் பல ஆடம்பரமான ஹோட்டல்கள் உள்ளன. அவற்றில் சில மிகவும் தனித்துவமானவை. மலை, கடல், தனித்தீவு என வித்தியாசமான அனுபவங்களையும் பெரும் விதத்தில் இவை காணப்படுகின்றன.

இந்நிலையில், ஒரு தனியார் நிறுவனம், வானில் பறக்கும் நட்சத்திர ஹோட்டலை உருவாக்கியுள்ளது. அதாவது   க்ரூஸ் எனப்படும் சொகுசுக் கப்பல்களை போன்று ஸ்கை க்ரூஸை உருவாக்கி உள்ளனர். இதில் ஜிம் முதல் நீச்சல் குளம் வரை அனைத்து வசதிகளும் உள்ளன.

இந்த ஸ்கை க்ரூஸின் வீடியோவை ஏமன் நாட்டு பொறியாளர் ஹஷேம் அல்-கைலி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர்,. “இது அணுசக்தியால் இயங்கும் ஒரு பெரிய ‘பறக்கும் ஹோட்டல்’. இது வானத்தில் பறந்து கொண்டே இருக்கும். இதில் ஒரே நேரத்தில் 5,000 பயணிகள் தங்க முடியும். காற்றில் பறக்கும் மேகங்களுக்கு மத்தியில் இருப்பது யாரையும் சிலிர்க்க வைக்கும். உடற்பயிற்சி கூடம் முதல் நீச்சல் குளம் வரை அனைத்து வசதிகளும் இதில் இருக்கும்.

இந்த பறக்கும் ஹோட்டல் ஆடம்பரத்தின் சின்னமாக பார்க்கப்படுகிறது. உள்ளே இருந்து பார்த்தால் 5 நட்சத்திர ஹோட்டல் போல தோன்றும். இதில், வணிக வளாகம், பார், உணவகம், விளையாட்டு வளாகம், தியேட்டர் ஆகியவற்றுடன், குழந்தைகள் விளையாடும் மைதானமும் கட்டப்பட்டுள்ளது. ஒரு மாநாட்டு மையமும் இருக்கும். அங்கு எந்த நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்யலாம்.

இந்த ஸ்கை க்ரூஸ் முற்றிலும் அணுசக்தியால் இயக்கப்படுகிறது. இதற்கு விமானம் போல் எரிபொருளை நிரப்ப வேண்டிய அவசியமே இருக்காது. அணு எரிபொருளாக இருப்பதால், அது எப்போதும் காற்றில் பறந்து கொண்டே இருக்கும். அதன் பராமரிப்பும், பழுது நீக்கும் பணியும் வானிலேயே செய்யப்படும்” என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X