2025 மே 16, வெள்ளிக்கிழமை

பற்றியெரிந்த பங்காபஜார்; 3,000 கடைகள் சேதம்

Ilango Bharathy   / 2023 ஏப்ரல் 06 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் உள்ள பிரபலமான ஆடைச் சந்தையான பங்காபஜாரில் நேற்று முன்தினம்(04)அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 3,000 கடைகள் தீயில் எரிந்து நாசமாகின.

600 தீயணைப்பு வீரர்கள் மற்றும் இராணுவத்தினர் கொளுந்து விட்டெறிந்த தீயை அணைக்கும் பணியில் 6 மணி நேரமாக ஈடுபட்டு தீயை கட்டுப்படுத்தினர்.

 சிறிய அளவில் தடுப்புகளுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள இக் கடைகளில் குறைந்த விலையில் ஆடைகள் கிடைக்கும் என்பதால் எப்போதும் அதிக சனநெரிசல் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது.

 மேலும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு கடையிலும் கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டிருந்ததால் வியாபாரிகள் கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .