Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 மே 15 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலுசிஸ்தான் இனி பாகிஸ்தானின் மாகாணம் அல்ல என்றும், விடுதலை பெற்றுவிட்டதாகவும் பலூச் தலைவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் தென்மேற்கு பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக் கோரி கிளர்ச்சியாளர்கள் பல ஆண்டாக போராடி வருகின்றனர்.
சமீபத்தில் இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே போர் ஏற்பட்ட நிலையில், பலூச் அமைப்பின் தலைவர் மிர் யார் பலூச் நேற்று தனது எக்ஸ் தளத்தில், ''1947ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11இல் ஆங்கிலேயர் வெளியேறிய போதே நாங்கள் எங்கள் சுதந்திரத்தை அறிவித்து விட்டோம்.இந்திய ஊடகங்களும், யூடியூபர்களும் இனி பலுசிஸ்தானை பாகிஸ்தானின் மாகாணமாக குறிப்பிட வேண்டாம்.
“நாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல, நாங்கள் பலுசிஸ்தானியர்கள். பலுசிஸ்தான் குடியரசாக எங்களை உலகம் அங்கீகரிக்க வேண்டும். பலுசிஸ்தானின் தூதரகத்தை டெல்லியில் அமைக்க இந்தியா அனுமதி தர வேண்டும். ஐநாவும் எங்களை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும்'' என கூறி உள்ளார்.
இதைத் தொடர்ந்து பலுசிஸ்தான் குடியரசு என சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
24 minute ago
3 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
3 hours ago
3 hours ago
6 hours ago