2026 பெப்ரவரி 05, வியாழக்கிழமை

பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு: அறுவர் படுகாயம்

Freelancer   / 2025 ஏப்ரல் 18 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில், 6 பேர் படுகாயமடைந்தனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், பல்கலைக்கழகத்தில், வெள்ளிக்கிழமை (18) காலை வழக்கம்போல் வகுப்பறையில் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று கொண்டிருந்தனர்.

காலை 11.50 மணியளவில் பல்கலைக்கழகத்திற்குள் திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. மாணவன் ஒருவரே,  துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். 

இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார், துப்பாக்கி சூடு நடத்திய மாணவனை சுட்டு வீழ்த்தினர். துப்பாக்கி சூடு நடத்தியது அப்பகுதியை சேர்ந்த பொலிஸ் அதிகாரியின் மகன் என விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X