Editorial / 2025 மே 15 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

மெக்சிகோவில் தேசிய நெடுஞ்சாலையில் பஸ்ஸூம், டிரக்கும் மோதிக் கொண்ட விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மத்திய மெக்சிகோவின் பூப்லா - ஒக்ஸாகா தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இரு வாகனங்களும் மோதிய பிறகு தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், சிக்கி 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மெக்சிகோவில் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. அலட்சியமாக வாகனங்களை ஓட்டுவது, டிரைவரின் சோர்வு காரணமாக சரக்கு லாரிகள் விபத்தில் சிக்குவது கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகின்றன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரையில் காம்பேச் மற்றும் பிற பகுதிகளில் மட்டும் நிகழ்ந்த சாலை விபத்துக்களில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனவே, சாலை விபத்துக்களை தடுக்க கடுமையான விதிமுறைகளை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
35 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago