2025 மே 19, திங்கட்கிழமை

பாகிஸ்தானின் கடன் சரிவை கணித்தது ஐ.எம்.எஃப்

Freelancer   / 2022 ஏப்ரல் 24 , பி.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் அரசாங்கத்தின் மொத்தக் கடனின் சரிவை சர்வதேச நாணய நிதியம்  கணித்துள்ளது. 

தொற்றுநோயிலிருந்து போர் வரையிலான நிதிக் கண்காணிப்பு நிதிக் கொள்கையின்படி, பாகிஸ்தானுக்கான அரசாங்கத்தின் மொத்தக் கடன் எதிர்வரும் ஆண்டுகளில் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதாவது 2021 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 74 சதவீதத்திலிருந்து 2022 இல் 71.3 சதவீதமாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2021ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான மொத்தக் கடன் 74 சதவீதமாக இருந்தது. இருப்பினும், நடப்பு நிதியாண்டில் 71.3 சதவீதமாகவும், வரவிருக்கும் 2023ஆம் நிதியாண்டில் 66.8 சதவீதமாகவும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பாகிஸ்தானுக்கான நிகரக் கடன், 2021இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 66.4 சதவீதத்தில் இருந்து 2022இல் 65.4 சதவீதமாகக் குறையும் எனவும்
எதிர்வரும் 2023ஆம் நிதியாண்டில் 66.8 சதவீதமாகவும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் வருமானம் 2022 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.6 சதவீதமாகவும், 2021 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் 12.5 சதவீதத்திலிருந்து 2023 ஆம் ஆண்டில் 12.9 சதவீதமாகவும் இருக்கும்.
 
2021இல் 8.9 சதவீதமாக இருந்த பணவீக்க சதவீதத்தை 2022ஆம் ஆண்டில் 11.2 சதவீதமாக இரட்டை இலக்கத்தில் நிதியம் கணித்துள்ளதுடன், இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டின் இறுதியில் நுகர்வோர் விலைகள் 10.5 சதவீதமாக இருக்கும் என்று அறிக்கை கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X