Freelancer / 2025 ஜூன் 29 , மு.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானில் தாலிபான்கள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 16 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 20 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கனிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த 2021 முதல் பாகிஸ்தானில் தாலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தான் தாலிபான் என்ற தனி அமைப்பு இந்த தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், ஆப்கனிஸ்தானை ஒட்டிய கைபர் பக்துன்வா மாகாணத்தின் வடக்கு வஜீரிஸ்தான் மாவட்டத்தில் இராணுவ வாகனங்கள் மீது வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை தற்கொலைப் படைத் தீவிரவாதி மோதியதில், இராணுவ வீரர்கள் 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பொதுமக்கள், உள்ளூர் அரசாங்க அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் உள்பட 20 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். (a)

1 hours ago
7 hours ago
28 Mar 2026
28 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
28 Mar 2026
28 Mar 2026