2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பாகிஸ்தானில் பதற்றம்: 11 பேர் உயிரிழப்பு; அச்சத்தில் மக்கள்

Ilango Bharathy   / 2023 மார்ச் 22 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதிகளை மையமாகக்  கொண்டு ஏற்பட்ட இந்நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில்  6.8 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 இந்நிலநடுக்கத்தால் பாகிஸ்தானின் லாகூர், இஸ்லமாபாத், ராவல் பிண்டி, குவெட்டா, பெஷாவர், கோஹட், லக்கி மார்வட் உள்ளிட்ட பகுதிகள் குலுங்கின.

மேலும் இந்நில நடுக்கத்தினால் 11 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் , 160 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதே சமயம் ஆப்கானிஸ்தானிலும் சக்திவாய்ந்த நில நடுக்கமொன்று  ஏற்பட்டதாகவும், இது ரிச்டர் அளவுகோளில் 6.6 ஆகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதுமட்டுமல்லாது  இந்நிலநடுக்கத்தின் அதிர்வுகள், டெல்லி, உத்தர பிரதேசத்திலும் உணரப்பட்டுள்ளதாகவும், எனினும் அப்பகுதிகளில் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .