Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 மே 19 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடன் தொகையில், அடுத்த தவைணையை விடுவிக்க பாகிஸ்தானுக்கு கூடுதலாக 11 புதிய நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் விதித்து இருப்பதாக, அந்த நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 700 கோடி டொலர் கடன் வழங்க கடந்த ஆண்டு சர்வதேச நாணய நிதியத்துக்கும் (ஐ.எம்.எப்.), பாகிஸ்தானுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
பாகிஸ்தானுக்கு முதல் தவணையாக 110 கோடி டொலர் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் 2ஆவது தவணையாக 102 கோடி டொலரை சர்வதேச நாணயம் நிதியம் விடுவித்தது.
இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருந்தபோது, இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி இந்த தொகை விடுவிக்கப்பட்டது.
தற்போது அடுத்த தவைணையை விடுவிக்க பாகிஸ்தானுக்கு கூடுதலாக 11 புதிய நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் விதித்து இருப்பதாக அந்த நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இவற்றையும் சேர்த்து மொத்த நிபந்தனைகள் 50ஆக அதிகரித்து இருக்கிறது. மேலும் இந்தியாவுடனான போர் பதற்றம் இந்த கடன் திட்டத்தில் அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
1 hours ago
2 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
5 hours ago