Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 மே 04 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுடனான பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், பாகிஸ்தான் இராணுவத்தில் கடுமையான ஆயுத பற்றாக்குறை உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் ஆயுத தொழிற்சாலையானது, இராணுவத்துக்கு தேவையான ஆயுதங்களை விநியோகித்து வருகிறது.
ஆனால், கவச பிரிவு வாகனங்கள் மற்றும் பீரங்கி வாகனங்களுக்கு தேவையான எறிகுண்டுகள் போதிய அளவில் இல்லை. எம்.109 ஹவிட்ஜர்ஸ் ரக பீரங்கிகளுக்கு வேண்டிய எறிகுண்டுகளும், பி.எம்.-21 சாதனங்களுக்கு தேவையான ராக்கெட்டுகளும் போதிய அளவில் இல்லாத சூழலில், இந்தியாவின் தாக்குதலை அந்நாட்டு இராணுவம் எதிர்கொள்வது என்பது திறனற்ற ஒன்றாகவே உள்ளது.
உலகளாவிய தேவையை முன்னிட்டு வெளிநாடுகளுக்கு ஆயுதங்களை விநியோகித்து விட்டு உள்நாட்டுக்கு வேண்டிய ஆயுதங்கள் பற்றாக்குறையாக உள்ள நாடாக உள்ளது.
இதன்படி, உக்ரைனுக்கு பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களை கொடுத்து விட்டு, பாகிஸ்தானின் கையிருப்பில் குறைந்த அளவே ஆயுதங்கள் உள்ளன என சமூக ஊடக தகவல்களும் தெரிவிக்கின்றன.
இதுபோன்று முக்கியத்துவம் வாய்ந்த வெடிபொருட்கள் பற்றாக்குறையால், பாகிஸ்தான் இராணுவம் ஒரு கட்டத்தில் அச்சமடைந்து உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது பற்றியும் மற்றும் வேறு சில விசயங்கள் பற்றியும் கடந்த 2ஆம் திகதி நடந்த சிறப்பு படைகளின் தளபதிகளுக்கான மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டு உள்ளன.
இதே விசயங்களை முன்னாள் இராணுவ தலைமை தளபதி குவாமர் ஜாவித் பஜ்வாவும் இதற்கு முன்பே ஒப்புக்கொண்டார். இந்தியாவுடன் நீண்டகால மோதலில் ஈடுபட போதிய ஆயுதங்கள் இல்லாமல் பற்றாக்குறையான சூழலிலும், பொருளாதார வலுவற்றும் பாகிஸ்தான் உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இதனால், இந்தியா தாக்கினாலும் அதனை எதிர்க்க போதிய வெடிபொருட்கள், ஆயுதங்கள் வசதி இல்லாத நாடாகவே பாகிஸ்தான் உள்ளது.
15 minute ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
2 hours ago
5 hours ago