2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பாக். அடக்குமுறையால் உயிர்த் தியாகம் செய்யும் பலூச் மக்கள்

Freelancer   / 2022 மே 04 , பி.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனவேதனை அடைந்த 30 வயதான பலூச் பெண் ஆசிரியை ஒருவர் கராச்சி பல்கலைக்கழகத்தில் தனக்குத் தானே தீ வைத்து 3 சீனர்கள் உட்பட நான்கு பேரைக் கொன்ற சம்பவம், பலுசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தானின் அடக்குமுறைக் கொள்கைகள் மற்றும் இனப்படுகொலையின் விளைவு என்று பலூச் பெண் ஆர்வலர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், பலூச் விடுதலை இராணுவத்தில் சேர்ந்த ஷரி பலோச், "சுய தியாகப் பணிக்கு" தானாக முன்வந்து பலூச் இனப்படுகொலை, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் ஆக்கிரமிப்பு மற்றும் இப்போது சீனாவின் வளர்ந்து வரும் முதலீடு மற்றும் அப்பகுதியில் குறுக்கீடு ஆகியவற்றிற்கு எதிராக பழிவாங்க சீனர்களைக் குறிவைத்தார். 

"பலூச் மக்கள் என்ன செய்கிறார்கள், அதற்கு யார் காரணம் என்பதை உலகம் புரிந்து கொள்ள முடியும் என்பதற்காக மிகவும் கண்ணியமான மற்றும் நன்கு படித்த குடும்பத்தைக் கொண்ட அழகான இரண்டு குழந்தைகளின் தாயான ஷரி பலோச் சுய தியாகம் செய்ய முடிவெடுத்தார்" என்று கனடாவில் உள்ள உலக பலூச் பெண்கள் மன்றத்தின் தலைவர் பேராசிரியர் நெய்லா குவாட்ரி பலோச் கூறினார்.

“எங்கள் மகள்களையும் மகன்களையும் சுய தியாக நிலைக்குத் தள்ளுவதற்கு பாகிஸ்தான் அரசாங்கமும், சீன கம்யூனிஸ்ட் அரசாங்கமும் தான் காரணம். ஏனென்றால், அரசியல் தளம் எதுவும் இல்லை, மேலும் ஐக்கிய நாடுகள் சபையும் பலூச் மக்களின் பேச்சைக் கேட்கவில்லை“ என்று பேராசிரியர் நெய்லா மேலும் தெரிவித்தார். 

பலுசிஸ்தான் நீண்ட காலமாக பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் கோரி வரும் நிலையில், பல பில்லியன் டொலர்கள் செலவில் சீனாவால் தொடங்கப்பட்ட வன் பெல்ட் வன் ரோட் திட்டம் மேலும் உணர்ச்சிகளை தூண்டியுள்ளது.

திட்டத்தின் ஒரு பகுதியாக சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை எதிர்க்கும் பலூச் மக்கள், பாகிஸ்தான் இராணுவத்தின் அடக்குமுறை மற்றும் இனப்படுகொலையை எதிர்கொள்கின்றனர்.

பலோச் அரசியல் ஆர்வலர்கள், புத்திஜீவிகள் மற்றும் மாணவர்கள் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் பாகிஸ்தானிய பாதுகாப்புப் படைகள் மற்றும் இரகசிய அமைப்புகளால் கொல்லப்பட்ட சம்பவங்கள் எண்ணிலடங்காதவை என்று தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X