Freelancer / 2025 மே 13 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய மியான்மரின் தபாயின் நகரத்தில் உள்ள கிராமத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது மியான்மர் இராணுவம் மேற்கொண்ட வெடிகுண்டு தாக்குதலில், 20 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மத்திய மியான்மரின் தபாயின் நகரத்தில் உள்ள கிராமத்தின் மீது, திங்கட்கிழமை (12) காலை 9 மணி அளவில் இராணுவத்தினர் விமானங்களில் இருந்து தாக்குதலில் இறங்கினர். அப்போது அந்த பகுதியில் இருந்த பாடசாலை ஒன்றின் மீது ஒரு போர் விமானம் வீசிய வெடிகுண்டு விழுந்து வெடித்தது.
இந்த தாக்குதலில் 20 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் அருகிலுள்ள 3 வீடுகள் சேதமடைந்தன.
இதேபோன்று, கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், பாடசாலை மற்றும் கிராமத்தின் மீது இராணுவ ஹெலிகொப்டர்கள் நடத்திய வான்வழி தாக்குதல்களில் 7 சிறுவர்கள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.
2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தாக்குதலில் 160 பேர் வரை கொன்று குவித்துள்ளனர். இந்த வான்வழித் தாக்குதல் குறித்த தகவல்களை மியான்மர் இராணுவ அரசாங்கமோ, ஊடகங்களோ அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
52 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
58 minute ago
1 hours ago