Editorial / 2019 பெப்ரவரி 12 , பி.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

வயது வராதோருக்கெதிரான பாலியல் துன்புறுத்தலுக்காக, கடந்த ஒன்பதாண்டுகளில் குறைந்த 152 கத்தோலிக்க பாதிரியார்கள் மெக்ஸிக்கோவில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மெக்ஸிக்கோவின் மொன்டெரேரேக்கான பேராயர் றொஜெலியோ கப்ரெரா தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களெனக் கூறப்படுபவர்களுக்கான வழக்கறிஞரொருவர் தேவாலயத்தின் உண்மையை நேற்றுக் கேள்விக்குட்படுத்தியுள்ளார்.
“சில குற்றம் இழைத்த பாதிரியார்கள் சிறையில் இருக்கின்றார்கள். ஏனையோர் அவர்களின் சபைகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்கள். கடந்த ஒன்பதாண்டுகளில் 152 பாதிரியார்கள் ஓய்வுபெற்றுள்ளார்கள்” என றொஜெலியோ கப்ரெரா செய்தியாளர்களிடம் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
ஐக்கிய அமெரிக்கா, சிலி, அவுஸ்திரேலியா, ஜேர்மனி உள்ளடங்கலான நாடுகளின் கத்தோலிக்க தேவாலயத்தில் நீண்ட பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளிவந்த நிலையிலேயே மேற்படி தகவல் வெளிவந்துள்ளது. பிரேஸிலுக்கு அடுத்ததாக, உலகின் இரண்டாவது பெரிய கத்தோலிக்க சமூகத்தை மெக்ஸிக்கோ கொண்டிருக்கின்றது.
அந்தவகையில், தேவாலயத்தில் இடம்பெற்ற பாலியல் துன்புறுத்தல்கள் உலகளாவிய ரீதியில் வெளியானமை குறித்து புனித பாப்பரசர் பேராயர்களுடன் இம்மாத இறுதியில் கலந்துரையாடவுள்ள நிலையில், இதனால் திருச்சபையின் நம்பத்தகமை பாரியளவில் இழக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago