2025 மே 14, புதன்கிழமை

பிரபஞ்ச அழகியாக ஷெய்னிஸ்

Freelancer   / 2023 நவம்பர் 20 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

72வது உலக பிரபஞ்ச அழகிப்போட்டி எல் சால்வடார் நாட்டில் இடம்பெற்றது. இப் போடடியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 90 பெண்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட உரைகள், நேர்காணல்கள் மற்றும் ஆடை அலங்காரங்கள் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இறுதிச்சுற்றில் நிகரகுவா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, கொலம்பியா, போர்ட்டோரிகோ ஆகிய 5 நாடுகள் சேர்ந்த அழகிகள் இடம்பெற்றனர். அவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்ட பிறகு பட்டத்துக்காக இறுதிச் சுற்றுக்கு நிகரகுவா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா அழகிகள் நுழைந்தனர்.

இந்நிலையில் உலக பிரபஞ்ச அழகியாக நிகரகுவா நாட்டை சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் நிகரகுவா பெண் என்ற சிறப்பை ஷெய்னிஸ் பெற்றார்.

மேலும், 2-வது இடத்தை தாய்லாந்து அன்டோனியா போர்சில்ட்டும், 3-வது இடத்தை ஆஸ்திரேலியாவின் மொராயா வில்சனும் பிடித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X