Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2023 ஜூலை 03 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரிட்டனில் பட்டினி பிரச்சனை தற்போது இயல்பான ஒன்றாக மாறிவிட்டதாக ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பான சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் IDS அமைப்பு ஆய்வு கூறுகையில், பிரிட்டனில் 14 சதவீத மக்கள் உணவு பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்நாட்டில் உணவு பெறுவதில் மக்களிடையே சமத்துவம் இன்மை மிக அதிகம் உள்ளதாகவும், 10 ஆண்டுகளாக இதை சரிசெய்ய தொண்டு அமைப்புகள் முயற்சித்து வருவதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால், இது நீண்ட கால தீர்வு அல்ல. 10 ஆண்டுகளுக்கு முன் 100 உணவு வங்கிகள் மட்டுமே சேவை செய்த நிலையில், 2021இல் இந்த எண்ணிக்கை 2,000ஆக அதிகரித்தது. 2022 செப்டம்பர் புள்ளிவிவரப்படி 97 அலட்சம் மக்கள் உணவு பஞ்சத்திற்கு ஆளாகியுள்ளனர் என ஆய்வுத் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், பிரிட்டனில் ஏழு பேரில் ஒருவர் பட்டினிக்கு ஆளாவதாக டிரசல் டிர்ஸ்ட் என்ற அமைப்பு நடத்திய ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 7 சதவீதம் பேர் தொண்டு அமைப்புகளையே உணவுக்காக சர்ந்து இருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ரஷ்யா-உக்ரைன் இடையே நடைபெறும் போர் காரணமாக உலக நாடுகளின் உணவு சங்கிலி விநியோகம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் உணவு நெருக்கடி தலைதூக்கியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
3 hours ago