Editorial / 2019 ஒக்டோபர் 30 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரிட்டனில் டிசெம்பர் 12 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் பெரும்பாலான உறுப்பினர்கள் தேர்தல் நடத்த ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதிலுள்ள முட்டுக்கட்டைகளை நீக்க அது உதவும் என்று நம்பப்படுகிறது. தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று மூன்று முறை மேற்கொள்ளப்பட்ட முயற்சி முன்பு தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில், புதிய தேர்தல் அறிவிப்பு பிரதமர் போரிஸ் ஜோன்சனின் வெற்றியாகக் கருதப்படுகிறது. என்றாலும், டிசெம்பர் 12 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படுவதை நாடாளுமன்ற மேலவை உறுதி செய்ய வேண்டும். இந்த வார இறுதிக்குள் அது சட்டவடிவமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டை ஒருமைப்படுத்தவும், பிரெக்சிட் உடன்பாட்டை மேற்கொள்வதற்கும் உரிய தருணம் இது என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.
20 minute ago
45 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
45 minute ago
51 minute ago