Editorial / 2019 பெப்ரவரி 11 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக, கடந்தாண்டு வரை 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தமது செயற்பாடுகளை ஐ.இராச்சியத்திலிருந்து நெதர்லாந்துக்கு மாற்றியுள்ளன அல்லது மாற்றவுள்ளதாக அறிவித்துள்ளன என, நெதர்லாந்து தெரிவிக்கிறது.
இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்ட நெதர்லாந்தின் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான முகவராண்மை, 42 நிறுவனங்கள் இவ்வாறு தமது நாட்டுக்கு வருகின்றமை காரணமாகச் சுமார் 2,000 வேலைவாய்ப்புகள் ஏற்படுமென்றும் 330 ஐ.அமெரிக்க டொலர் முதலீடுகள் கிடைக்கப்பெறுமெனவும் தெரிவித்தது.
இவ்வாறு இடமாறுவதாக அறிவித்துள்ள நிறுவனங்களில் அநேகமானவை ஐ.இராச்சியத்தைச் சேர்ந்தவையெனவும், இன்னும் சில, ஆசியாவையோ, ஐ.அமெரிக்காவையோ சேர்ந்தவையெனவும் நெதர்லாந்து தெரிவிக்கிறது.
நெதர்லாந்து தவிர, ஜேர்மனி, பிரான்ஸ், அயர்லாந்து போன்ற நாடுகளுக்குச் செல்வதற்கும் பல நிறுவனங்கள் முயல்கின்றன எனவும், நெதர்லாந்துத் தரப்புத் தெரிவிக்கிறது.
இவ்வாண்டு மார்ச் 29ஆம் திகதியுடன் பிரெக்சிற் நடைமுறைக்கு வருகிறது. ஆனால், பிரெக்சிற் தொடர்பான இணக்கப்பாடு இதுவரை எட்டப்படவில்லை. எனவே, பிரெக்சிற் தொடர்பான குழப்பங்கள் தொடர்ந்து வருகின்றன.
குறிப்பாக, இணக்கப்பாடேதும் இல்லாமல் வெளியேறுவதற்கான ஏற்பாடுகளையும், ஐ.இராச்சிய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. ஆனால், அவற்றிலும் குழப்பங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக, அவ்வாறான சந்தர்ப்பத்தின் போது கடற்போக்குவரத்துக்கான வசதிகளை வழங்குவதற்காக, 17.9 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தை, ஐ.இராச்சிய நிறுவனமொன்றுக்கு அரசாங்கம் வழங்கியிருந்தது. ஆனால், கப்பல்களே இல்லாத நிறுவனத்திடம் அவ்வொப்பந்தம் வழங்கப்பட்டமை தொடர்பில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தமையைத் தொடர்ந்து, அவ்வொப்பந்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
8 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Nov 2025
05 Nov 2025