Editorial / 2019 பெப்ரவரி 04 , மு.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகும் (பிரெக்சிற்) போது குழப்பங்கள் ஏற்பட்டு, இலண்டனில் கலவரங்கள் ஏற்பட்டால், அரச குடும்பத்தை இடமாற்றுவதற்கான திட்டத்தை, ஐ.இராச்சிய அதிகாரிகள் மீளக் கையிலெடுத்துள்ளனர். பனிப்போர் காலத்தில் காணப்பட்ட அவசரகாலத் திட்டங்களே, இவ்வாறு மீளக் கையிலெடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான தகவல்களை, ஐ.இராச்சியத்தின் த சண்டே டைம்ஸ், த மெய்ல் ஆகியன நேற்று (03) வெளியிட்டன.
இதன்படி, அரசி எலிஸபெத் உட்பட அரச குடும்பத்தை, இலண்டனுக்கு வெளியே கொண்டு செல்வதற்கான திட்டங்கள் குறித்து அறிந்ததாக, இரு பத்திரிகைகளும் தெரிவித்தன.
பிரெக்சிற் தொடர்பான ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவதற்கு, ஐ.இராச்சிய அரசாங்கம் தடுமாறி வருகிறது. மார்ச் 29ஆம் திகதி பிரெக்சிற் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், அதற்கு முன்னர் அதற்கான ஒப்புதல் கிடைக்குமா என்பதில் சந்தேகம் காணப்படுகிறது. எனவே தான், ஒப்பந்தமேதுமின்றி வெளியேற்றம் நடப்பதற்கான ஏற்பாடுகளை அரசாங்கமும் வணிகங்களும் மேற்கொண்டு வருகின்றன.
அவ்வாறு ஒப்பந்தமேதுமின்றி அந்த வெளியேற்றம் நடக்குமாயின், அமைதியின்மை ஏற்படக்கூடிய சூழல் இருப்பதாகக் கருதப்படும் நிலை யிலேயே, இவ்வா றான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago