2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

பிரெக்சிற்றைத் தாமதப்படுத்த அமைச்சர்கள் சிலர் ஆதரவு

Editorial   / 2019 பெப்ரவரி 25 , மு.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவது (பிரெக்சிற்) தொடர்பில் எழுந்துள்ள குழப்பங்களுக்கு மத்தியில், பிரெக்சிற்றைத் தாமதப்படுத்துவதற்கான ஏற்பாடுகளுக்கு, மூன்று அமைச்சர்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

பிரெக்சிற் தொடர்பில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரதமர் தெரேசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை, ஐ.இராச்சிய நாடாளுமன்றம் ஏற்கெனவே நிராகரித்திருந்த நிலையில், புதிய ஒப்பந்தத்தையும் நாடாளுமன்றம் நிராகரிக்கும் ஆபத்தே காணப்படுகிறது.

இந்நிலையில், புதிய ஒப்பந்தமும் நிராகரிக்கப்பட்டால், பிரெக்சிற்றைத் தாமதப்படுத்தும் திட்டங்களுக்கு ஆதரவளிக்கப் போவதாக, வணிக அமைச்சர் கிரெக் கிளார்க், பணியும் ஓய்வூதியமும் அமைச்சர் அம்பர் றுட், நீதியமைச்சர் டேவிட் கோக் ஆகியோர் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால், மார்ச் 29ஆம் திகதியன்று, ஒப்பந்தமேதுமின்றி வெளியேறும் ஆபத்துக் காணப்படுகிறது. இவ்வாறான நிலைமையைத் தடுப்பதற்காக, பிரதமரின் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்களும், எதிர்க்கட்சிகளும் இணைந்து, பிரெக்சிற்றைத் தாமதப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், எதுவித ஒப்பந்தங்களுமின்றி வெளியேறுவது, வணிகத்துக்கும் பாதுகாப்புக்கும் பிரித்தானியப் பிராந்திய ஒற்றுமைக்கும் ஆபத்தானதெனத் தெரிவித்த அவர்கள், நாடாளுமன்றத்திலுள்ள சில உறுப்பினர்கள், இவ்விடயத்தில் பொறுப்பின்றிச் செயற்படுகின்றனர் எனக் குற்றஞ்சாட்டினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X