Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 மே 04 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய அறிவிப்பால் அமெரிக்காவில் திரையிடப்படும் இந்திய படங்களுக்கு டிக்கெட் கட்டணம் உயரும் என்று கூறப்படுகிறது
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனக்கு சொந்தமான 'ட்ரூத்' சமூக வலைதளத்தில், அமெரிக்க திரைப்படத் துறை (ஹாலிவுட்) மிக வேகமாக பேரழிவிற்குள்ளாகி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், மற்ற நாடுகள் அதற்கான முயற்சியை ஒருங்கிணைந்து மேற்கொண்டுள்ளன. அது அமெரிக்க தேசத்தின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளாகவும் சாடியுள்ளார்.
“அனைத்துக்கும் மேலாக இந்தப் படங்கள் பிரச்சார பாணியில் உள்ளன. எங்களுக்கு வேண்டியதெல்லாம் மீண்டும் அமெரிக்காவில் திரைப்படங்கள் எடுக்க வேண்டும்.
“இந்த புதிய கட்டண முறை திரைப்படத் துறையில் நிலவும் போட்டியை சமன் செய்வதையும், அமெரிக்க தேசத்தில் உள்ள ஸ்டூடியோக்கள் தங்கள் செயற்பாடுகளைத் தொடர ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று அதில் பதிவிட்டுள்ளார்.
ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பால் அமெரிக்காவில் திரையிடப்படும் இந்திய படங்களுக்கு டிக்கெட் கட்டணம் உயரும் என்று கூறப்படுகிறது. மேலும் 100 சதவீத வரி விதிப்பால் டிக்கெட் கட்டணம், படப்பிடிப்பு, தொழில்நுட்ப பணிக்கான கட்டணம் உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago