Freelancer / 2022 பெப்ரவரி 09 , பி.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீஜிங் குளிர்கால ஒலிம்பிக்குக்கு வருகை தந்தவர்களிடையே கடந்த 24 மணி நேரத்தில் பத்து புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளர் என்றும் மேலதிகமாக, நான்கு விளையாட்டு வீரர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒலிம்பிக்கில் மொத்தமாக 72,000 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதில் நான்கு விளையாட்டு வீரர்கள் தொற்றுக்குள்ளாமை உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று ஏற்பாட்டுக் குழுவினர், ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாக ஸ்புட்னிக் செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம், பீஜிங் ஒலிம்பிக் பங்கேற்பாளர்களிடையே 21 பேர் தொற்றுக்குள்ளானதாக வெள்ளிக்கிழமை கூறியிருந்தது.
இதன் மூலம், ஒலிம்பிக் குமிழி (பபிள்) என்று அழைக்கப்படும் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கையை 308 ஆக உயர்ந்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் பெப்ரவரி 20ஆம் திகதி வரையும், பாராலிம்பிக் போட்டிகள் மார்ச் 4 முதல் 13ஆம் திகதி வரையும் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
12 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
28 minute ago