2025 மே 16, வெள்ளிக்கிழமை

புகுஷிமா பகுதியில் வசிக்க அனுமதி

Freelancer   / 2023 ஏப்ரல் 02 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

புகுஷிமா அணுமின் நிலைய விபத்து நடந்த இடத்தில் 12 ஆண்டுகளுக்கு பின் ஒரு சில பகுதிகளில் மக்கள் வசிப்பதற்கு  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் கடந்த 2011ம் ஆண்டு பயங்கர  நிலநடுக்கம்  ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு சுனாமி தாக்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.‌மேலும் புகுஷிமாவின் டாய்ச்சி அணு உலையில் உள்ள ஜெனரேட்டர்கள் சேதம் அடைந்தன. இதனால் சுற்றியுள்ள பகுதிகளில் அணு கதிர்வீச்சு தாக்கியது.

மக்கள் வசிக்க முடியாத அளவிற்கு அணு உலையில் இருந்து  கதிர் வீச்சின் தாக்கம்  அதிகமாக இருந்தது. 20 கிலோ மீட்டர் சுற்றளவில் வசித்து வந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். விபத்து நடந்து 12 ஆண்டுகளுக்கு பின்,டோமியோகா நகரின் ஒரு சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு மக்கள் மீண்டும் குடியேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .