Editorial / 2019 ஜனவரி 28 , பி.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு நெருக்கமானவரான ஒலெக் டெரிபஸ்காவுடன் தொடர்புபட்ட பாரிய அலுமினிய நிறுவனமான ருசல், ஏனைய நிறுவனங்கள் மீதான தடைகளை ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம் நேற்று நீக்கியுள்ளது.
ஐக்கிய அமெரிக்க காங்கிரஸில், கட்டுப்பாடுகளைத் தொடர்வதற்கான ஜனநாயகக் கட்சியினரின் நகர்வுக்கு மேலாலேயே குறித்த தடைகள் நீக்கப்பட்டுள்ளன.
ருசல், அதன் தாய் நிறுவனமான ஈ.என்பிளஸ் குறூப் பி.எல்.சி, ஜே.எஸ்.சி யூரோசிப்எனெர்கோ நிறுவனங்கள் மீதான தடைகளைத் தொடரும்பொருட்டு ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து ட்ரம்பின் குடியரசுக் கட்சியின் 11 உறுப்பினர்களும் ஐக்கிய அமெரிக்க செனட்டில் இம்மாத ஆரம்பத்தில் நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்தனர். எவ்வாறாயினும் அது ட்ரம்ப், அவரது குடியரசுக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களை சமாளிக்க போதுமானதாக இருந்திருக்கவில்லை.
இந்நிலையில், தடைகளைத் தொடரக் கோருவோர் டெரிபஸ்கா, குறித்த நிறுவனங்களில் அதிகளவு கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருந்தநிலையில், மூன்று நிறுவனங்களும் டெரிபஸ்காவின் நேரடியான, மறைமுகமான பங்குபரிவர்த்தனையை குறைத்துள்ளதாகவும் அவரது கட்டுப்ப்பாட்டைத் துண்டித்துள்ளதாகவும் தமது அறிக்கையொன்றில் ஐக்கிய அமெரிக்க திறைசேரித் திணைக்களம் நேற்று தெரிவித்திருந்தது.
உக்ரேனின் கிறீமியாவை சேர்த்துக் கொண்டமை, ஐக்கிய அமெரிக்க தேர்தல்களில் தலையிட முயன்றமை, சிரிய யுத்தத்தில் சிரிய அரசாங்கத்துக்கு ஆதரவளித்தமை உள்ளிட்ட ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்காகவே கடந்தாண்டு ஏப்ரலில் குறித்த தடைகள் விதிக்கப்பட்டிருந்தன.
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago