Freelancer / 2023 ஒக்டோபர் 03 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேபாளத்தில் இன்று பிற்பகல் 2.25 மணியளவில் ரிக்டர் 4.6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் 2.51 மணியளவில் ரிக்டர் 6.2 அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைப்பகுதியில் இருந்து சுமார் 5 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் தாக்கம் டெல்லி-என்சிஆர் உட்பட வட இந்தியாவின் பல பகுதி மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் உண்டான சேத விபரங்கள் தொடர்பில் விரிவான தகவல் தெரிவிக்கப்படவில்லை.
மேலும் டெல்லி-என்சிஆர் குடியிருப்பாளர்கள் இரண்டாவது நிலநடுக்கத்திற்குப் பிறகு அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களில் இருந்து வெளியேறும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றது.

19 minute ago
27 minute ago
36 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
27 minute ago
36 minute ago
48 minute ago