2025 மே 17, சனிக்கிழமை

பும்ராவுக்கு ஆபரேஷன் வெற்றி

Freelancer   / 2023 மார்ச் 09 , பி.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியின் போது முதுகுப் பகுதியில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக லேசான எலும்பு முறிவு ஏற்பட்டதால் எஞ்சிய போட்டி தொடரில் இருந்து விலகினார். மற்றும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியைத் தவறவிட்டார்.

அவரது காயத்துக்கு நிரந்தர தீர்வு காண சத்திர சிகிச்சை செய்ய வேண்டியது அவசியம் என்று தேசிய கிரிக்கெட் அகாடமியின் மருத்துவ குழுவினர் பரிந்துரை செய்தனர்.

இதையடுத்து நியூசிலாந்தின் கிறைஸ்ட் சர்ச் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் கடந்த திங்கட்கிழமை பும்ராவுக்கு சத்திர சிகிச்சை செய்யப்பட்டது.  

இந்த மாதம் இறுதி வரை நியூசிலாந்தில் தங்கி சிகிச்சை பெறும் பும்ரா ஆகஸ்டு மாதம் முதல் பயிற்சியை தொடங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .