2025 மே 19, திங்கட்கிழமை

பெண் கல்வி தடையை நீக்குமாறு தலிபான்களுக்கு கோரிக்கை

Freelancer   / 2022 ஏப்ரல் 20 , பி.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் மனித உரிமை மீறல்களை தீவிரமாகக் கருத்தில் கொண்டு, பெண் கல்வி மீதான தடையை நீக்க வேண்டும் என்று ஐரோப்பிய பாராளுமன்றத்தின் ஜேர்மன் உறுப்பினர் ஹன்னா நியூமன், தலிபான்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் நிர்வாகத்தின் அனைத்து நிலைகளிலும் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் என டொலோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மார்ச் 23 ஆம் திகதியன்று, 6ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படிக்கும் மாணவிகள் பாடசாலைகளுக்கு செல்ல தடை விதித்து தலிபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். 

பாடசாலைகளுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்ட பின்னர்  பெண்கள் விரக்தியில் உள்ளனர் எனவும் புத்தகப் பைகள், புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வாங்க, சில குடும்பங்கள் தங்கள் கடைசி சதங்களையும் செலவழித்துள்ளமையையும் ஹன்னா சுட்டிக்காட்டினார்.

தலிபான்கள் நல்ல போராளிகள், ஏனென்றால் அவர்களால் ஒரு நாட்டைக் கைப்பற்ற முடிந்தது, ஆனால் ஒரு நாட்டை நிர்வகிப்பதற்கு வேறுபட்ட திறன்கள் தேவை என்று ஜேர்மனிய எம்.பி ஹன்னா குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, கனடா, பிரான்ஸ், இத்தாலி, நோர்வே, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள், ஆப்கான் பெண்களுக்கு கல்வி வாய்ப்பை மறுத்த தலிபான்களின் தீர்மானத்தை கடுமையாக சாடியுள்ளனர். 
 
தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கான் கொண்டுவரப்பட்டதில் இருந்து, ஆப்கான் சிறுமிகள் பயணம், வேலை மற்றும் கல்வி ஆகியவற்றில் கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X