2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பேதம் பார்க்கும் பேஸ்புக்

Ilango Bharathy   / 2023 மார்ச் 14 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பேஸ்புக்  நிறுவனமானது `ஆண்,பெண் பேதம் பார்ப்பதாகப் `பிரபல ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சம்பளம் வழங்குவதில்லை என்ற செய்தி, உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ”கிட்டத்தட்ட 3000 பெண்கள் அயர்லாந்தில் உள்ள மெட்டா அலுவலகத்தில் வேலை பார்ப்பதாகவும், சுமார் 5000 பெண்கள் பிரிட்டனில் உள்ள மெட்டா அலுவலகத்தில் வேலை பார்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக கணக்கிட்டால் மெட்டா நிறுவனத்துக்காக உலக அளவில் வேலை பார்க்கும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் இந்த பெண்கள் மட்டும் சுமார் 10 சதவீதம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் கடந்த 2022 ஆம் ஆண்டு அயர்லாந்தில் உள்ள மெட்டா அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கு, அதே பதவியில் அதே பணிகளைச் செய்யும் ஆண்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை விட 15.7 சதவீதம் குறைவாக சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

 அதேபோல அயர்லாந்தில் உள்ள மெட்டா அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஆண்களுக்கு கொடுக்கப்படும் போனஸ் தொகையை விட, அதே பதவி மற்றும் பொறுப்புகளில் அதே வேலையை பார்க்கும் பெண்களுக்கு கிட்டத்தட்ட 43 சதவீதம் அளவுக்கு போனஸ் தொகை குறைவாகவே வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .