Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Ilango Bharathy / 2022 மே 04 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க ஜனாதிபதியை மேடையில் வைத்து நகைச்சுவை நடிகர் ஒருவர் சீண்டிய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற விருந்து உபசார நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பிரபல நகைச்சுவை நடிகரான டிரிவோர் நோவா அந்நிகழ்வில் உரையாற்றும்போது ”ரஷ்யா போன்று ஒரு மோசமான நாடு இருக்க முடியாது.
அங்கே சுதந்திரம் என்பது பேச்சுக்கு கூட கிடையாது. அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நாவல்னி ரஷ்ய ஜனாதிபதியை விமர்சித்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு அவருக்கு விஷம் வைத்து கொலை செய்யும் முயற்சியும் நடைபெற்றது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர் ஜேர்மனியில் சிகிச்சை எடுத்தார். மீண்டும் அவரை கைது செய்த ரஷ்ய அரசு 9 ஆண்டுகள் கடும் காவல் தண்டனை விதித்தது.
இப்போது ரஷ்யா, உக்ரேனில் போர் தொடுத்து வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதே அமெரிக்காவை நினைத்து பாருங்கள். நாம் எல்லோரும் சுதந்திரமாக இருக்கிறோம். அமெரிக்க ஜனாதிபதியைக் கூட நான் சீண்டிவிட்டு அமைதியாக போய்விட முடியும். என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என கூறினார்.
பின் அமெரிக்க ஜனாதிபதியைப் பார்த்து நான் உங்களை சீண்டியதற்கு எதுவும் செய்ய மாட்டீர்கள் தானே என கிண்டலாகக் கேட்டார்.
அதன்பின் பேசிய ஜோ பைடன் டிரேவர் நோவாவை பார்த்து," ‘டிரேவருக்கு ஒரு நல்ல செய்தி. அமெரிக்காவில் நீங்கள் அந்நாட்டு ஜனாதிபதியைக் கூட சீண்ட முடியும். அதற்காக மாஸ்கோவில் உள்ளது போல உங்களை சிறையில் அடைக்க மாட்டார்கள்" எனக் கூறினார்.
அவரது பதிலானது அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .